Friday, February 9, 2024

சமாதானமும் அமைதியும்

சிந்தனைக்கு.
சமாதானமும் அமைதியும் ஒரே பொருளுள்ள வார்த்தைகளா?

சமாதானம் உறவினைக் குறிக்கும்.

இருவர் சமாதானமாக உள்ளார்கள் என்றால் இருவர் இடையே நல்லுறவு நிலவுகிறது,  இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக உள்ளார்கள் என்பது பொருள்.

இருவர் அமைதியாக உள்ளார்கள் என்றால்? இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்பது பொருள்.


இரண்டு சண்டைக்காரர்கள்கூட, ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள்கூட ஒரே இடத்தில் அமைதியாக இருக்கலாம்.


வல்லரசுகள் அமைதியாக இருந்தபோதுகூட போருக்கு தயாரித்துக்கொண்டுதான் இருந்தன.


மனிதன் பாவம் செய்யுமுன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே சமாதான உறவு இருந்தது. 

மனிதன் செய்த பாவத்தினால் சமாதான உறவு முறிந்தது.

முறிந்த சமாதானத்தை மீண்டும் ஏற்படுத்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய இறைமகன் மனிதன் ஆனார்.


கிறிஸ்து பிறந்த அன்று இறைவன் உலகோர்க்கு அளித்த முதல் நற்செய்தி "விண்ணுலகில் இறைவனுக்கு மகிமையும் , பூவுலகில் நல்மனதோர்க்கு. சமாதானமும் உண்டாகுக" என்பதுதான்.


ஏதோ நினைத்தேன், எழுதுகிறேன்.

No comments:

Post a Comment